625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் வெற்றியை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த பெண் செவிலியர் பெண் மரணமடைந்தார்.

போலந்து நாட்டை கைப்பற்றுவதற்காக ஜேர்மனி இரண்டாம் உலகப்போரில் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் ஜேர்மனியின் இரண்டாம் உலகப்போரை எதிர்த்தனர். ஜேர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இருந்தன.

சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த போரில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைவதாக தெரிவித்தது.

இதை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது அங்கே இருந்த இராணுவ வீரர் ஒருவர் நர்ஸ் கிரேட்டா ஜிம்மர்(21) என்ற செவிலியரை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த காட்சியை பிரபல புகைப்பட கலைஞரான ஆல்பர்ட் என்செய்ஸ்டாட் புகைப்படம் எடுத்தார். இப்புகைப்படம் பிரபல வார இதழ் ஒன்றில் வெளியானதால் இருவரும் புகழ்பெற்றனர்.

இராணுவவீரர் முத்தமிட்ட நர்ஸ் கிரேட்டா ஜிம்மர் (92) நிமோனியா நோய் தாக்கத்தின் காரணமாக நேற்று உயிரிழந்தாக அவரது மகன் ஜோஸ்கிவா பிரைட்மேன் தெரிவித்தார்.

இவரது உடல் அர்லிங்டன் நகரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment