யூதர் ஒருவர் 6 வயது பாலஸ்தீன சிறுமியை மிக கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெத்லகேம் நகரம் அருகே அமைந்துள்ள அல்-காதர் கிராமம், அருகே 6 வயது பாலஸ்தீனிய சிறுமியை யூதர் ஒருவர் கார் ஏற்றிக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமி Lama Musa என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சிறுமியை மோதியவுடன் ஓட்டுநர் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ஓட்டுநர் சரணடைந்து விட்டதாகவும். தான் எந்த நோக்கத்தோடும் சிறுமி மீது காரை மோதவில்லை எனவும் தெரிவித்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மனதை உருக வைக்கும் வகையில் சிறுமியின் இறுதிச்சடங்கு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment