625.368.560.350.160.300.053.800.560.160.90சுவிட்சர்லாந்து நாட்டில் விமானம் புறப்படுவதற்கு முன்னால் இருக்கைக்காக பயணிகள் சண்டையிட்டதால் விமானிகள் பயணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஜெனிவா நகரில் இருந்து அல்ஜீரியா நாட்டிற்கு சர்வதேச சுவிஸ் ஏர் லைன்ஸ் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட தயாராக இருந்துள்ளது.

விமானத்தில் 110 பயணிகளும் அவர்களது இருக்கையில் அமர்ந்ததும் விமானம் நிறுத்தப்பட்டுருந்த இடத்தில் இருந்து நகர்ந்து பறக்க தயாராக இருந்துள்ளது.

அப்போது 6 பயணிகள் திடீரென இருக்கையை விட்டு எழுந்து சண்டையிட தொடங்கியுள்ளனர். விசாரணை செய்தபோது அவர்களில் சிலர் இருக்கைகளில் மாறி அமர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.

விமான குழுவினர் சண்டையை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், சண்டை மேலும் அதிகரித்துள்ளது.

இதே நிலையில் பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது என தீர்மானித்த விமானிகள் பயணத்தை ரத்து செய்துவிட்டு விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு திரும்பியுள்ளனர்.

பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தகராறில் ஈடுப்பட்ட 6 பேரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஆனால், நபர்கள் வெளியேற்றப்பட்ட நிலையிலும் விமானம் பயணம் மேற்கொள்ளப்படவில்லை.

ஏனெனில், காலத்தாமதம் ஏற்பட்டுள்ளதால் அல்ஜீரியா நாட்டிற்கு சென்று விட்டு அதே இரவில் ஜெனிவாவிற்கு திரும்ப முடியாது என்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அனைத்து பயணிகளும் ஜெனிவாவில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் காலை மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment