625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தை தொடர்ந்து நாட்டில் இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினிலிருந்து வெப்ப காற்று, கடல் கடந்து வீசுவதால் லாஸ் ஏஞ்சல்ஸ், தாய்லாந்தை விட பிரித்தானியாவில் அதிக வெப்பம் ஏற்பட சாத்தியமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் 1961ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதி அதிகபட்சமாக 31.6 செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாளைய வெயில் 31.6 செல்சியஸை விட அதிமாக பதிவாகி 55 வருடத்தில் அதிக வெப்பமான நாளாக வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், இந்த கடுமையான வெப்பத்தினால் முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கிட்டதட்ட இரண்டு, மூன்று நாட்களுக்கு மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இரவில் குளிரான இடத்தில் உறங்கும் படி தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment