625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)பிரித்தானியாவில் கணவர் ஒருவர் தம்மீது இரக்கம் காட்டாத மனைவியை இணையதளத்தில் ஏலம் விட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் யார்க்‌ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 33 வயதான டெலிகொம் பொறியியலாளர் சைமன் கேன். இவர் தமது மனைவியை இரக்கமற்றவர் என கூறி வர்த்தக இணையத்தளம் ஒன்றில் விற்பனைக்கு வைத்துள்ளார்.

இரக்கமற்றவர் என்ற தலைப்பில் தமது மனைவி 27 வயதான லியாண்ட்ரா என்பவரை இணையத்தில் விற்பனைக்கு வைத்த சைமனுக்கு அடுத்த இரண்டு தினத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

குறிப்பிட்ட இணையத்தளத்தில் இவரது மனைவிக்கு 65,880 பவுண்டு வரை விலை தர முன்வந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கேள்வியுற்ற சைமனின் மனைவி தமது கணவரை கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணினாராம். காரணம் அவரது அலுவலகத்தில் இதுகுறித்து இவரை கிண்டலடித்துள்ளனராம். மட்டுமின்றி தமது கணவர் அந்த இணையத்தளத்தில் அழகான புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவத்தில் சைமனின் குறிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. தமது மனைவியின் குணத்தை குறிப்பிட்ட அவர், உடலமைப்பும் அழகும் இன்னும் கெடாமல் உள்ளது, சமையல் அறைக்கு தேவையான சில வித்தைகளை கற்று வைத்திருக்கிறார்.

அடிக்கடி வீணாக கூச்சலிடுவார், ஆனால் அவரது கூச்சல் அடங்க சந்தையில் புதிதாக வெளி வந்துள்ள ஆபரணங்கள் போதும்.

சில நேரம் அவரது சமையலறை வித்தைகள் நம்மை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். ஆனாலும் ஓராண்டு பயன் படுத்திக்கொள்ளலாம். தேவையுள்ளவர்கள் அணுகலாம், மட்டுமின்றி வயது குறைவான ஏதேனும் மொடல் இருந்தால் கூட மாற்றி எடுத்துக்கொள்ளலாம் என கிண்டலடித்து அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment