625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)லண்டனில் வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையிட முயன்றவர்களை தடுக்க முயற்சித்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் “சேட்வெல்ஹீத்” என்ற இடத்தில் நேற்று 27 வயதான நபரும் அவரது தந்தையும் கொள்ளையில் ஈடுபட முயன்ற நான்கு பேரை தடுக்க போராடிய சந்தர்பத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றள்ளது.

இதன் போது இரண்டு பேரும் கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த 46 வயதான தந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதுடன் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டு புலன் விசாரணையாளர்களினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment