625.0.560.320.500.400.194.800.668.160.90அமெரிக்காவில் போதை மருந்துக்கு அடிமையாகி சுயநினைவற்ற தன் தாயை, அவரது குழந்தை அழுது கொண்டே எழுப்ப முற்படும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் Massachusetts நகரில் Lawrence என்ற பகுதியில் உள்ள Family Dollar store என்ற கடைக்கு 36 வயது மதிக்கத்தக்க தாயும், அவருடைய இரண்டு வயது குழந்தையும் சென்றுள்ளனர்.

தனக்கு தேவையான பொருட்களை குழந்தையின் தாய் எடுத்து கொண்டிருந்த போது திடீரென சுயநினைவற்று கிழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

இதைக் கண்ட அவரின் குழந்தை தன் தாயை எழுப்புவதற்காக பல முறை முயற்சி செய்கிறாள் ஆனால் அவர் எழவில்லை. இதனால் அக்குழந்தை அழுது கொண்டே தன் தாயின் கன்னத்தில் அடிக்க, நெஞ்சை பிடிக்க என பல முயற்சி செய்கிறாள் ஆனால் பலன் அளிக்க வில்லை.

தன் தாய் கண்விழிக்காத காரணத்தினால் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறாள்.

இதைக் கண்ட கடையில் இருந்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் பொலிசார் விசாரணையில் இப்பெண் போதை பொருள் உட்கொண்டதன் விளைவாக மயக்கமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் போதை மருந்து உட்கொண்டாரா அல்லது போதை பொருட்கள் சம்பந்தமான வேறு ஏதும் உட்கொண்டார என்பது அவர் சுய நினைவுக்கு வந்த பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு குழந்தை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை கடையில் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

 

Comments

comments, Login your facebook to comment