625.0.560.320.500.400.194.800.668.160.90வங்க தேசத்தில் இறந்ததாக புதைக்கப்பட்ட குழந்தை தீடீரென அழுது உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தின் டாக்கா பகுதியைச் சேர்ந்தவர் மாவட்ட கிரிக்கெட் வீரர் நஜ்முல்ஹுடா. இவருக்கு கலிபா ஹயத் என்ற மனைவியும் உள்ளார்.

கர்ப்பமாக இருந்த கலிபா ஹயத்துக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரசவத்தின் போது கலிபாவுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் மருத்துவர்கள் குழந்தை பிறக்கும் போதே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோகம் தாங்காமல், மருத்துவமனை அருகே இருந்த சுடுகாட்டில் புதைப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

புதைப்பதற்காக குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து புதைத்துள்ளனர். புதைத்த சில மணித்துளிகளில் குழந்தையின் அழுகுரல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து கேட்டுள்ளது.

இதனால் புதைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தோண்டிய போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை தீவீரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment