625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தன் காதலன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள புகைப்படத்தை சமூகவலத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் கிலாஸ்கோ மகாணத்தை சேர்ந்தவர் Kelsie Skillen. இவர் James McCourt(19) என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார்.

கடந்த யூன் மாதம் Kelsie வீட்டிற்கு அவருடைய காதலன் James McCourt வந்துள்ளார். இருவரும் சகஜமாக பேசியுள்ளனர்.

அப்போது McCourt வீட்டின் கதவை பூட்டி தன்னுடைய காதலியை சுமார் 4 மணி நேரம் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் அவரின் முகம் மற்றும் கை, கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து Skillen தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன் காதலன் தன்னை எப்படி எல்லாம் தாக்கியுள்ளான் என்பதை குறிக்கும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதை கண்டு யாரும் கிராபிக்ஸ் என்று நினைக்க வேண்டாம். தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை வீட்டில் அடைத்து வைத்து 4 மணி நேரம் தாக்கியதன் விளைவே இந்த புகைப்படங்கள் என்று கூறியுள்ளார்.

தன்னை தாக்கிய காதலன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் அதன் தீர்ப்பை தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நிலைமையை கண்டு தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் எனவும் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கெல்சியின் தாயார் கூறுகையில், தன்னுடைய மகளின் தைரியத்தை நினைத்து நான் பெருமை படுகிறேன். இது தொடர்பான வழக்கு கிலாஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தானும் தன் மகளும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தன் காதலன் தன்னை தாக்கியதற்கான காரணத்தை கெல்சி தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

Comments

comments, Login your facebook to comment