625.368.560.350.160.300.053.800.560.160.90தென் ஆப்பிரிக்கா நாட்டில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை 3 பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள Durban என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இதே நகரில் வசித்து வந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.

‘என்னுடைய வீட்டில் மின்சார பிரச்சனை இருக்கிறது. தயவு செய்து வந்து உதவி செய்யுங்கள்’ என நபரிடம் அப்பெண் கேட்டுள்ளார்.

உதவி கேட்ட பெண் நன்கு அறிமுகமானவர் என்பதால், நபரும் அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டை திறந்து உள்ளே சென்றதும், அங்கு ஒரு இருக்கையில் மற்றொரு இளம்பெண் இருந்துள்ளார். எனினும், அவர் மீது நபர் கவனம் செலுத்தவில்லை.

நபர் உள்ளே நுழைந்ததும் கதவுக்கு பின்னால் நின்றுருந்த 3-வது பெண் ஒருவர் திடீரென கதவை பூட்டியுள்ளார்.

இந்த 3 பெண்களும் நபருக்கு அறிமுகமானவர் என்பதால், அவர் இதனை பெரிதாக எடுக்கவில்லை.

அப்போது மூன்று பெண்களில் ஒருவர் ‘உங்களுடன் நாங்கள் மூவரும் உறவுக்கொள்ள விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.

பெண் கிண்டல் செய்கிறார் என எண்ணிய நபர் மூவரையும் பார்த்து சிரித்து விட்டு ‘மின்சார பிரச்சனை எங்கு இருக்கிறது’? எனக் கேட்டுள்ளார்.

நபர் வழிக்கு வரமாட்டார் என்பதை உணர்ந்த 3 பெண்களும் திடீரென நபர் மீது பாய்ந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்தில் நபரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஒரு கையை அவரால் பலமாக கையாள முடியாது.

இதனால், மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தாக்கியதை அவரால் தடுக்க முடியவில்லை. எனினும், இறுதி வரை போராடிய அந்த நபரை கட்டிப்போட்டு 3 பெண்களும் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு சோகமாக திரும்பிய அந்த நபர் நடந்தவற்றை தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

சகோதரன் கூறுவதை கேட்ட அவர் பலமாக சிரித்துள்ளார். சகோதரன் கூறியதை அவர் நம்பவில்லை.

ஆனால், இரண்டு தினங்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியுள்ளது.

நபரை பலாத்காரம் செய்ததை அந்த 3 பெண்களும் ரகசியமாக வீடியோ எடுத்திருந்தது அப்போதுதான் அந்த நபருக்கு தெரியவந்தது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபரின் சகோதரி இதனை உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

நபர் எதிர்ப்பார்த்தது போல் அவர் புகார் தெரிவித்தபோது பொலிசார் அதனை நம்பவில்லை. ஆனால், வீடியோ ஆதாரத்தை காட்டிய பிறகு பொலிசார் உடனடியாக அந்த 3 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான முதல் விசாரணை நாளை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment