625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் ஐந்து மாதத்துக்கு முன்னர் இறந்து போன தனது பாட்டியுடன் அவரது பேரன் வசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் (30) என்பவர் தனது பாட்டியான Erika Kraus-Breslin (85) உடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கிரிஸ்டோபரின் தாய் வேறு ஒரு ஊரில் வசித்து வந்துள்ளார், அடிக்கடி வீட்டு தெருவில் நடமாடும் முதிய பெண்மணி Erika பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார்.

இது அவரது வீட்டின் அருகே இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் அதிகம் அடிக்கவே அருகில் இருந்தவர்கள் இது பற்றி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே அந்த முதிய பெண்மணி Erika சடலமாக சாக்கு பையில் இருந்துள்ளார். சடலத்தை மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கிரிஸ்டோபரை கைது செய்தனர்.

விசாரணையில் கிரிஸ்டோபர், என் பாட்டி கடந்த மே மாதம் இறந்து விட்டார். எங்கே இதை வெளியில் சொன்னால் என்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய சொல்லி விடுவார்களோ என அஞ்சி தான் அதை வெளியில் சொல்லவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில், அந்த முதிய பெண்மணி Erika இயற்கையாக இறந்தாரா அல்லது வேறு காரணமா என அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment