625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)_1பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் Sao Paulo மாகாணத்தில் உள்ள Pitangueiras என்ற நகரில் Valissia Fernandes de Jesus என்ற 15 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணியான அவர் தனக்கு பிறக்குபோகும் பிள்ளைக்காக ஆடைகள் மற்றும் பச்சிளம் குழந்தைக்கு தேவையான பொருட்களை சேமித்து வந்துள்ளார்.

இதே நகரில் Mirian Siqueria(25) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை இவர் வீட்டில் இருந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நீண்ட மாதங்களாக கர்ப்பம் அடையவில்லை.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக தனது கணவரிடம் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது வயிற்று பகுதி பெரிதாக உள்ளதால் கணவருக்கு சந்தேகம் எழவில்லை.

ஆனால், குழந்தையை கணவரிடம் காட்ட வேண்டும் என எண்ணிய அவர் கர்ப்பிணி பெண்களை நோட்டம் விட்டு வந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழலில் 15 வயதான கர்ப்பிணி பெண்ணை அவர் ஒரு பொது இடத்தில் நேற்று முன் தினம் சந்தித்துள்ளார்.

பின்னர், ‘எனது வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அழகிய பொருட்கள் இருக்கின்றன. நேரடியாக எனது வீட்டிற்கு வந்த அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

பெண் கூறியது உண்மை என எண்ணிய கர்ப்பிணி அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் நுழைந்ததும் 8 மாதமான அந்த கர்ப்பிணி பெண்ணை அவர் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் கர்ப்பிணி பெண் சுயநினைவை இழந்துள்ளார்.

பின்னர், சமையலறைக்கு சென்ற அப்பெண் கூர்மையான கத்தியை எடுத்து வந்து கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த பச்சிளம் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், கத்தியால் தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இருவரின் உடல்களையும் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரப்பெட்டியில் வைத்து அப்பெண் மறைத்துள்ளார்.

ஆனால், அப்பெண்ணின் கொடூரமான செயல்கள் அவரது கணவர் மூலம் வெளியே வந்ததை தொடர்ந்து அப்பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.

கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரப் பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)_1 625.0.560.350.160.300.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment