1453437963-7126அமெரிக்காவில் கற்பழிப்பு குற்றவாளி ஒருவருக்கு நீதிபதி 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கலிபோர்னியா நகரை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அவரது வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் அவரது மகளுடன் தகாத முறையில் நடந்துள்ளார்.

ஆனால், இதனை கண்டிக்க வேண்டிய தந்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து பெற்ற மகள் மீது அவரது நடவடிக்கை வேறு விதமாக இருந்து வந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த அதே ஆண்டு மே மாதம் தனது சொந்த மகளை அவர் துடிக்க துடிக்க கற்பழித்துள்ளார்.

இதனை அடுத்து வாரத்திற்கு 3 நாட்கள் என தொடர்ந்து 4 ஆண்டுகள் மகளை கற்பழித்து வந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் இளம்பெண்ணிற்கு 23 வயது எட்டியபோது தோழிகளிடம் கூறி பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.

பெற்ற மகளை 4 ஆண்டுகள் தந்தை கற்பழித்த இவ்வழக்கில் 186 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இது தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றவாளிக்கு 13 முதல் 22 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர் இச்சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என கருதிய நீதிபதி குற்றவாளி வெளியே வராத அளவிற்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கலிபோர்னியா நீதிமன்ற வரலாற்றில் ஒரு குற்றவாளிக்கு நீண்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment