போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டில் ஐந்து வயது சிறுவனின் உடலில் எந்த ஒரு உலோகப் பொருடகள் வைத்தாலும் அப்படியே ஒட்டிக் கொள்ளும் ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பாவின் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டினைச் சேர்ந்தவர் Erman Delic(5). இச்சிறுவனுடைய உடம்பில் எந்த ஒரு உலோகப் பொருட்கள் வைத்தாலும் அது அப்படியே ஒட்டிக் கொள்வதாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தகவல் சென்றுள்ளது.

இதை உறுதி செய்வதற்காக அத்தொலைக்காட்சி நிரூபர் ஒருவர் சிறுவனின் உடம்பில் 3 ஸ்டிக் ஸ்பூன்களும் , 13 நாணயங்களை அவருடைய மார்பகத்திலும் மேலும் சில உலோகப் பொருட்களை வைத்து பார்க்கையில் அது கீழே விழாமல் அப்படியே நின்றன இதைக் கண்ட அத்தொலைக்காட்சி நிரூபர் ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

இது குறித்து அவரது பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றாலும், இது வினோதமான செயல் என்றும் அவர்களே குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே குணாதிசயம் உள்ள ரஷ்யாவைச் சேர்ந்த Nikolai Kryaglyachenko (12) என்ற சிறுவன் பள்ளிக்குச் சென்ற போது அங்கிருந்த மின்சாரகம்பத்தால் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற நிகழ்வு ஏற்படும் போது அவர்கள் கண்ணாடி, பீங்கான், மரம் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றையும் அவர்களால் ஈர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) 625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment