625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)ரஷ்யாவில் இரண்டு இளம் பெண்கள் மிருகங்களை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்று அப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றத்திற்காக Khabarovsk நகரத்தை சேர்ந்த 20 வயதான அலீனா மற்றும் 17 வயதான அல்யோனா என்ற இரண்டு பெண்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பேரும் பூனையின் உடலை கிழித்து இதயத்தை பார்த்தும். நாயின் நகத்தை சுவரில் வைத்து ஆணி அடித்தும் கொடுமை செய்துள்ளனர்.

இது போன்று பல மிருங்களை கொன்று அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலைியல் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் அலீனா விமானப்படை கர்னல் மகள் என தெரியவந்துள்ளது.

மேலும், அலீனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிசில் அலீனா கூறியதாவது, குறித்த புகைப்படங்கள் போட்டோஷாப்பில் தொகுக்கப்பட்டது. நான் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடவில்லை.

சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது முதல் முறையல்ல. நான் யாரையும் கொல்லவில்லை, எனக்கு அந்த நோக்கமே இல்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், பலர் இரண்டு இளம் பெண்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கும் படி மனு அளித்து வருகின்றனர்.625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) 625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment