625.0.560.350.160.300.053.800.668.160.90சிறப்பு வகுப்புக்கு தன் மகள் போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சங்கிலியால் தூணில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள சம்வே என்னும் முக்கிய சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து சைனீஸ் மொழியை கற்கும் சிறப்பு வகுப்புக்கு செல்வது அந்த சிறுமியின் வழக்கமாகும். ஆனால் நேற்று அந்த சிறப்பு வகுப்புக்கு அந்த சிறுமி செல்லவில்லை என கூறப்படுகிறது.

சிறுமி சிறப்பு வகுப்புக்கு போகாததால் கோபமடைந்த அவரின் தாய் அவரை சாலையோரத்தில் உள்ள ஒரு தூணில் சங்கிலியால் கால்களை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் அவரை இரவு பத்து மணி வரை விடுவிக்காமல் இருந்துள்ளார்.

இந்த பரிதாப காட்சியை அந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் பார்த்து சென்றுள்ளனர். இது குறித்து ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமியை கொடுமைப்படுத்திய அவர் தாய் மீது பொலிசாரின் நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) 625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment