அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற பெண்ணே இக்கொடூர செயலலில் ஈடுபட்டுள்ளார்.

ஆண்ட்ரே ப்ரிஸ், கிறிஸ்டின் கிளார்க் தம்பதிக்கு இரண்டு வயதில் Angel என்ற பெண் குழந்தையும், 1 வயதில் ஆண்ட்ரே ப்ரிஸ் III என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது.

கணவன், மனைவி இருவரும் சில நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கிளார்க் தன்னை பிரிந்துள்ள கணவருக்கு போனில் வன்முறையான மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கணவர் பதிலளிக்காததால் கடும் கோபமைடைந்த கிளார்க் தனது மெசேஜ்க்கு பதிலளிக்கவில்லை என்றால் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என மிரட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

பின்னர், ஆண் குழந்தையை கொன்று பெண் குழந்தையை கொல்லப்போவதாக வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

சிறது நேரத்தில் பெண் குழந்தையை துன்புறுத்தி அழ வைத்தும், ஆண் குழந்தை மூச்சற்று கிடப்பதை பதிவு செய்தும் அனுப்பியுள்ளார்.

மெசேஜ்களை தாமதமாக கண்ட கணவர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கிளார்க்கிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தலையணையால் அமுக்கி ஆண் குழந்தை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கணவர் மீது குற்றமில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், கிளார்க் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment