பிரான்சில் இளைஞர் ஒருவர் தனது Wi-Fiக்கு தீவிரவாதம் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பெயர் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குற்றத்திற்காக 18 வயதான இளைஞருக்கு நீதிமன்றம் 3 மாத இடைநிறுத்தம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டிஜோன் கிழக்கு நகர பகுதியில் தனது போனில் ‘Daesh21’ என்ற Wi-Fi பெயரை பார்த்த அண்டை வீட்டார் ஒருவர் உடனே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

‘Daesh’ என்ற சொல் அரபிக்கல் ஐ.எஸ்.யின் சுருக்கமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் Wi-Fi உரிமையாளரை கண்டறிந்து அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் தீவிரவாதம் சிந்தனைகள் தொடர்பான எந்த ஆதாரம் வீட்டில் கிடைக்கவில்லை.

மேலும், இளைஞன் தனக்கு தீவிரவாத சிந்தனை ஏதும் இல்லை, கேலிக்காக இப்படி செய்ததாக கூறி குற்றத்தை மறுத்துள்ளார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த இளைஞருக்கு 3 மாத இடைநிறுத்தம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment