ஷாங்காய் பகுதியில் சாலைகை கடக்க மிதிவண்டியில் காத்திருந்த முதியவரை பின்னோக்கி வந்த மினி வேன் ஒன்று மோதித் தள்ளி அவர் மீது ஏறி இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் நகரில் முதியவர் ஒருவர் தமது மிதிவண்டியுடன் சாலையை கடக்க போக்குவரத்து விளக்கு எரிய காத்து நின்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரது அருகாமையில் நின்றிருந்த மினி வேன் ஒன்று பின்னோக்கி நகர்ந்து வந்துள்ளது.

இது மிதிவண்டியுடன் நின்றிருந்த முதியவர் மீது மோதி அவரை சாலையில் தள்ளியுள்ளது. இருப்பினும் முதியவரால் அங்கிருந்து நகரும் முன்னர் குறித்த வேன் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தாலும் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவமானது கடந்த மாதம் 29 ஆம் திகதி நடந்துள்ளது. சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த குறித்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோரமான இந்த விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தை செலுத்தியவர் ஒரு பெண் என்றும் அவர் உடனடியாக வாகனத்தில் இருந்து வெளியே வந்து அந்த முதியவரை மீட்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

 

Comments

comments, Login your facebook to comment