sirumy1-680x365கனடா நாட்டில் பிறந்த நாளை கொண்டாட ஷொப்பிங் சென்ற 16 வயது சிறுமி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kamloops என்ற நகரில் Jennifer Gatey என்ற 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று சிறுமியின் 17-வது பிறந்த நாள் தொடுங்குவதால் அதனை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

மேலும், தனக்கு பிடித்தமான ஆடைகளை வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஷொப்பிங் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் நடந்த சென்ற சிறுமி மீது பலத்த வேகத்தில் ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

சாலையில் பலத்த ஓசை கேட்பதை அறிந்த நபர் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது சாலை ஓரமாக சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், பலத்த காயம் ஏற்பட்டதால் வாகனம் வருவதற்கு முன்னதாகவே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாளை கொண்டாட சென்ற மகள் பிணமாக வீடு திரும்பியது கண்டு பெற்றோர் மீள முடியாத துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இவ்விபத்து குறித்து பொலிசார் பேசியபோது, ‘சிறுமி மீது எந்த வாகனம் மோதியது என்பது தெரியவில்லை. ஆனால், வாகனத்தின் முன் பாகத்திற்கு சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இத்தகவலை வைத்து வாகன ஓட்டுனரை தேடி வருவதாகவும், விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment