625.0.560.350.160.300.053.800.668.160.90திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva (44) தனது கணவருடன் வசித்து வரும் இவருக்கு குழந்தைகள் இல்லை.

இவருக்கு பல வருடங்களாகவே ஒரு வினோதமான ஆசை இருந்து வந்தது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஆசை!.

ஆந்த ஆசையை தற்போது அவர் நிறைவேற்றி காட்டியிருக்கிறார். அதன்படி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சவப்பெட்டியில் சடலம் போல படுத்துள்ளார் Vera.

இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு கடந்த 14 வருடங்களாகவே இப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

ஆனால் இதற்கு என் கணவரும் என் உறவினர்களும் சம்மதிக்கவில்லை. பின்னர் எப்படியோ அவர்களை சமாதானப்படுத்தி இதை நான் செய்து விட்டேன்.

அதன் படி நான் காலையிலேயே வெள்ளை உடை அணிந்து சவப்பெட்டிக்குள் படுத்து விட்டேன்.

9 மணி முதல் மாலை 6 மணி வரை இப்படி தான் படுத்துருந்தேன். தண்ணீர், பழச்சாறு குடிக்க மட்டும் சில முறை எழுந்தேன்.

என் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் வந்து என் உடலுக்கு மலரஞ்சலியை சிரித்து கொண்டே செலுத்தினார்கள்.

என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக இதை கருதுகிறேன். இந்த விடயத்தை நான் மேற்கொள்ள உதவி செய்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment