அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 276 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 218 இடங்களை மட்டுமே பெற்றுள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது வெளியான தகவலில் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய 20 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

எஞ்சிய விஸ்கோன்சன், மிச்சிகன், அரிசோனா முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.

எனினும், இந்த மாகாணங்களிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற அதிகளவு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இம்மாகாணங்களில் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அவர் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.

தேர்தல் முடிவுகள் சாதகமாக வெளியாகும் நிலையில், டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment