160316133சுவிட்சர்லாந்தில் கடந்த 2015ம் ஆண்டு 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக இருந்த குற்றத்திற்காக 24 வயது இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் நீதிமன்றம் அதிரடி மாற்றம் செய்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சூரிச் ஸ்டிரீட் பரேட் விழாவில் கலந்துக்கொள்ள 24 வயது Valaisan இளைஞன் சென்றுள்ளார். அங்கு அவர் பாடலுக்கு நடனம் ஆடாமல், தான் ரயிலில் சந்தித்த இளம் பெண்ணுடன் முத்தங்கள் கொடுத்து நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால், இருவரும் செக்ஸில் ஈடுபடவில்லை.

பின்னர், இளைஞர் குடிக்க சென்றிருந்த நேரம் பார்த்து ஒருவர் பெண்ணின் மேல் விழுந்துள்ளார். கவலையடைந்து அவர் பெண்ணை மருத்துவ நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு குறித்த இளம் பெண்ணிற்கு 15 வயது என தெரியவந்தையடுத்த ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் கடந்த மே மாதம் சூரிச் நீதிமன்றம் குழந்தையுடன் பாலியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக Valaisan இளைஞருக்கு அபராத தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Valaisan இளைஞர் தனக்கு குறித்த பெண்ணின் வயது தெியாது என நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். பின்னர், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.

மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், இளைஞன் பெண்ணின் வயது தெரிந்தே குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க முடியாததை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுதலை செய்துள்ளது.

மேலும், மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டதிற்காக Valaisan இளைஞனுக்கு 500 பிராங்குகள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment