Tamil-Daily-News-Paper_65209162236பாகிஸ்தானில் பழிக்கு பழியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தையை, வன்கொடுமை செய்தவரின் மகளை பழிக்குப் பழியாக பாலியல் வன்கொடுமை செய்ய அங்குள்ள பஞ்சாயத்து உத்ததரவிட்டுள்ளது.

இதனால் அவரும் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரின், மகளை பழிக்குப் பழியாக வன்கொடுமை செய்துள்ளார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் இப்பெண் இந்த பாலியல் வன்கொடுமை வேதனையால் தன்னை தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் இதுகுறித்த புகாரை காவல்துறையிடனம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய நீதியை அல்லா தருவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment