625.0.560.350.160.300.053.800.668.160.90இந்தோனியாவில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் 2 வயது மதிக்கத்தக்க Ardi Rizal என்ற சிறுவன் நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் குடிக்கிறான் என்ற செய்தி வெளிவந்தது, அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.

தற்போது அச்சிறுவன் எப்படி உள்ளான் தெரியுமா? 24 கிலோ எடை குறைந்து ஸ்மார்ட்டாக வலம் வருகிறான்.

சிறுவயதில் தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால், Ardi Rizal-க்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்துள்ளது.

தொடர்ந்து உணவுகளை எடுத்துக் கொண்டதால் எடையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியதாம், சிறுவனின் நிலையை அறிந்து கொண்ட இந்தோனேஷிய அரசு உதவி செய்ய முன்வந்தது.

இதன்படி இவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 24 கிலோ எடை குறைந்ததுடன் சிகரெட் பழக்கத்தையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளான்.

சிறுவனின் இத்தகைய மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பலரும் அரசுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment