1464670347-4374கனடா நாட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் தன்னுடன் பணியாற்றிய பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

கியூபெக் மாகாணத்தை சேர்ந்த ஆலன் சாப்மேன் என்பவர் கனடா நாட்டு ராணுவத்தில் மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு சைப்ரஸ் நாட்டிற்கு ராணுவப்பணிக்காக சென்றபோது அவருடன் பணியாற்றிய பெண் ராணுவ அதிகாரியுடன் அவர் அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக புகார் கூறப்பட்டது.

இப்புகார் தொடர்பான விசாரணை கியூபெக் மாகாணத்தில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது ராணுவ வீரரின் செயலை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

பின்னர், பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக அவருடைய மாஸ்டர் வாரண்ட் அதிகாரி என்ற பதவியை இழந்து வாரண்ட் அதிகாரி என தகுதியிறக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆலன் சாப்மேன் மீதான 2,500 டொலர் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment