அவளுக்காய் 

படைப்புக்கள் புனிதமடி உன் கண்கள் பட்டால்

கொடைகளும் மெச்சுமடி உன் கைகள் பட்டால்

என் கவி நடைகளுக்கும் அச்சமடி உன் நினைவுகள் சுடுமோ என்று

விடைகள் இல்லாத விண்ணப்பம் காதலா? விடை கிடைத்ததும் விவாகரத்து விண்ணப்பத்தில் மோதலா??

உன் ஐடை கோபுரத்தில் உட்கார்ந்த அந்த மலர்களை வரம் கேட்டேன் என் கைகளில் தவள

படை திரட்டும் உன் பார்வைகளின் தலைவன் உன் புருவங்கள் என்றாய் பிரமித்து ஓரமாய் நின்று ரசித்தேன்

உன் விளிகளில் காதல்நீர் வழிகின்றது உன் உதடுகள் காதல் வாள் வீசுவதன் காரணம் தான் என்ன???

சொல்ல முடிந்தால் சொல் இல்லையேல் ஓர் பக்கத்தில் எழுதிவைத்து செல்

 அதை என் கவி புத்தகத்தின் கருத்துரையாய் வடிவமைக்கிறேன்.

அ:ஆதவன்

14159868_678454628987551_868667014_n

Comments

comments, Login your facebook to comment