இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் உரிமத்துக்காக மட்டும் சுமார் ரூ. 40 கோடி வாங்கியதாக செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம்.எஸ் டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தை எடுப்பதற்கு, அவருக்கு 40 கோடி கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, வெறும் உரிமத்துக்காக மட்டும் 40 கோடி ரூபாயை ஒரு கிரிக்கெட்டருக்கு எந்த தயாரிப்பு நிறுவனமும் கொடுக்காது என்றார்.

டோனியின் முன்னாள் காதலி பற்றிய விவரங்கள் தெரிந்துக்கொள்ள படம் வெளியாகும் வரை மக்கள் பொறுமையோடிருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment