ஒரே நிமிடத்தில் பலகோடிக்கு அதிபதியான நபர்! லொட்டரியில் வீடு தேடிவந்த அதிர்ஷ்டம்

கனடாவின் ரொரன்றோவில் வாழும் நபர் ஒருவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.

ரொரன்றோவில் வாழும் நிஷித்க்கு லொட்டரியில் 55 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

என் பெற்றோர்கள் எனக்காக செய்த தியாகம் பெரியது என்று கூறும் நிஷித், அதற்கேற்ற வகையில் நான் அவர்களுக்கு பதில் செய்யப்போகிறேன், அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளப்போகிறேன் என்கிறார்.

ரொரன்றோவில் வீடு வாங்கவேண்டுமென்ற கனவு நிஷித்துக்கு நீண்ட நாட்களாக உள்ளது. கடைசியாக எனது வீடு வாங்கும் கனவு நிறைவேறிவிட்டது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தென் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையும் நீண்ட நாட்களாக இருப்பதாகக் கூறும் நிஷித், அதே நேரத்தில், பணம் வந்தாலும், சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ முயற்சி செய்யப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.