சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்.. வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா

பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தின் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கமிட்டாகியுள்ளார்.

இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க ரூ. 9 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை கங்கனா ரனாவத்.