தளபதி67 படத்தில் நடிக்க முடியாது என கூறிய விஷால்! இது தான் காரணமாம்
விஜய் உடன் நடிக்க மறுத்தது ஏன் என நடிகர் விஷால் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாம் முறையாக கூட்டணி சேரும் படம் தான் தளபதி67. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்த பூஜையின் போட்டோ வீடியோ என எதுவும் இன்னும் வெளிவரவில்லை. அனைத்தும் ரகசியமாக இருப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறார் லோகேஷ்.
முதலில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷாலிடம் தான் லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார். ஆனால் அவர் மறுத்ததால் தற்போது அர்ஜுன் தான் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
இந்நிலையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் தளபதி67 பற்றி கேட்கப்பட்டது. “லோகேஷ் என்னிடம் கதை சொன்னது உண்மை தான். ஆனால் எனக்கு தொடர்ந்து கமிட்மென்ட் இருந்ததால் முடியாது என கூறிவிட்டிடேன்” என கூறி இருக்கிறார்.
தளபதி உடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரை என் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.