நீயா நானாவையே பிழை என்று கூறிய இளைஞர்! திடீர் காதலால் கடும் அதிர்ச்சியில் கோபிநாத்

நீயா நானா நிகழ்ச்சியில் கவிதை என்ற பெயரில் இளைஞர் ஒருவர் நீயா நானாவையே பிழை என்று கூறி அதிரவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தமிழ் இளைஞர்கள், காதல் கவிதை எழுதும் பெண்கள் என்பதில் விவாதிக்கப்பட்டது.

இதில் இளைஞர் ஒருவருக்கு பெண் ஒருவர் கவிதை ஒன்றினைக் கூற, அதற்கு குறித்த இளைஞர் அளித்துள்ள பதில் நீயா நானா அரங்கையே வாயடைக்க வைத்துள்ளது.

நம் இருவரையும் சேர்த்து வைத்த இந்த நீயா நானாவின் பிழை என்று கூறியதைக் கேட்ட கோபிநாத், வார்த்தை இல்லாமல் அதிர்ச்சியில் திணறியுள்ளார்.