பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்! வெளியான தகவல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது நேற்று முன்தினம் இரவு கடும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பேராசிரியரின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த மேலும் இருவரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் அடையாளம் தெரியாத நூற்றுக்கு மேற்பட்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.