பொது இடத்தில் உதயநிதி மனைவியுடன் சண்டை போட்ட விஷால்! இதுதான் காரணம்?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். சண்டக்கோழி, செல்லமே, துப்பறிவாளன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற வித்தியாசமான கதை அம்சத்தில் நடித்து மக்களை கவர்ந்திருப்பார்.

தற்போது அவர் நடிப்பில் “லத்தி” திரைப்படம் டிசம்பர் 22 வெளியாகவுள்ளது. இதை இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். இதைத்தொடரந்து மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார் நடிகர் விஷால்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷால் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நானும் கிருத்திகா, உதயநிதி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அப்போது நானும் கிருத்திக்காகவும் நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்டோம்.

எனக்கு கிருத்திகா ஒரு உடன் பிறந்த சகோதிரி போன்றவர். பல வருட நட்பு எங்களுடையது, நாங்கள் சந்திக்கும் போது பல சுவாரசிய விஷயங்களை பற்றி பேசுவோம்” என்றார்.