வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வருவோருக்கு புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு செல்ல விமானப் பயணிகளுக்கு புதிய ரயில் சேவையை நடாத்துவதற்கு துறைசார் அமைச்சுகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சிடம் வினவிய போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புகையிரத நிலையம் வரையிலான சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு வீதி நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான தற்போதைய திட்டங்களுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் நன்மை கருதி இந்த வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.