இலவங்குடா கடலில் கடலட்டைப் பண்ணை: அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
இலவங்குடா கடலில் கடலட்டைப் பண்ணை: அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
கிளிநொச்சி பூநகரி இலவங்குடா கடற்பரப்பில் பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி நான்காவது நாளாகவும் மக்கள் போராடி வருகின்றனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்ததாவது:
இலவங்குடா கடற்பரப்பில் பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி நான்காவது நாளாகவும் போராடி வருகின்றோம்.
எனினும் எமது போராட்டத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை. உரிய அதிகாரிகள் இதுதொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆகவே எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை மீட்பதற்கு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என போராட்டத்தின்போது அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.