கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உயிர் கொல்லி ஹெரோய்னை கனூலா’ ஊடாக ஏற்­றும் இளை­ஞர்­கள்!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உயிர் கொல்லி ஹெரோய்னை கனூலா’ ஊடாக ஏற்­றும் இளை­ஞர்­கள்!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் மருத்­து­வ­ம­னை­க­ளில் சிகிச்­சைக்கு வரும் இளை­ஞர்­கள் தமக்கு தொடர்ச்சியாக ஊசியை ஏற்­று­வ­தற்கு பதி­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ‘கனூலா’ என்ற மருத்­துவ உபகரணத்­தைப் பொருத்­தி­ய­தும் மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து நழு­விச் செல்­கின்­ற­னர் என்­றும், அவ்வாறு போடப்­ப­டும் ‘கனூலா’ ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை அவர்­கள் உட்செலுத்துகின்றனர் என்­றும் அதிர்ச்­சித் தக­வல் ஒன்­றும் வெளி­யா­கி­யுள்­ளது.

தொடர்ச்­சி­யாக ஊசி ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு குறிப்­பிட்ட காலத்­தின் பின்­னர், உட­லில் ஊசியை ஏற்ற முடி­யாத நிலைமை உரு­வா­கும். அவ்­வா­றான இளை­ஞர்­கள் கிளி­நொச்­சி­யி­லுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வெவ்­வேறு நோய் நிலை­மை­க­ளைக் கூறி சிகிச்­சைக்­காக சேரு­கின்­ற­னர்.

மருத்­து­வ­ம­னை­க­ளில் தொடர்ந்து ஊசி ஏற்­று­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ‘கனூலா’ போடப்­பட்­ட­தும் மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து நழுவி விடு­வி­கின்­ற­னர். பின்­னர் தமக்கு போடப்­பட்­டுள்ள ‘கனூலா’ ஊடாக உயிர் கொல்லி ஹெரோய்னை ஏற்­றிக் கொள்­கின்­ற­னர். இது ஆபத்­தா­னது என்று மருத்­து­வர்­கள் எச்சரித்­துள்­ள­னர்.