கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னாருக்கு சிவப்பு எச்சரிக்கை
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னாருக்கு சிவப்பு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி – மன்னார் உள்ளிட்ட நாட்டின் சில மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (18) வெளியிட்ட வானிலை அறிக்கையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுமார் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், இடி, மின்னல் தீவிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடி மின்னல் போன்றவற்றை தவிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.