தருமபுரம் பகுதியில் தீபாவளியன்று கஞ்சாவுடன் இருவர் கைது

தீபாவளியன்று கஞ்சாவுடன் இருவர் கைது

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து சோதனை மேற்கொண்டபோதே அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தருமபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.