கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகத்தில் திருட்டு

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகத்தில் திருட்டு

கிளிநொச்சி – தொண்டமான் நகரில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தில் இணைப்பு அலுவலகத்தில் பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தின் போது மடிக்கணினிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

அலுவலக கடமைகளை முடித்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்ற உத்தியோகத்தர்கள் அடுத்த நாள் கடமைக்கு வந்த போது அலுவலகம் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து உடனடியாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.