கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் முன்னெடுப்பு!

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் நிகழ்வு ஒன்று தர்மபுரம் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிபர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வசதியை வழங்குவதன் மூலம் மாணவர்களை சமப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலையக் கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா, உளநல மருத்துவர் வைத்தியர் ஜெயராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் விசேட தேவையுடைய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றளதோடு குறித்த மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.