புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற தாயும்,மகளும் கோர விபத்தில் மரணம்

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற தாயும்,மகளும் கோர விபத்தில் மரணம்

நீர்கொழும்பு பகுதியில் புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற தாயும்,மகளும் இன்றிரவு கோர விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

மூச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்ற தாயும், மகளுமே விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், 17 வயதுடைய மகளுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.

அதேவேளை, மூச்சக்கர வண்டி சாரதியும், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.