கிளிநொச்சி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது

கிளிநொச்சி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று(02) காலை கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை நாளை(03) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று(02) நடத்தப்பட்டது.

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் நேற்று(01) காலை 26 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.