கிளிநொச்சியில் முக்கிய குளங்கள் வான் பாயவில்லை -பாதிப்படையும் சிறுபோகம்

கிளிநொச்சியில் முக்கிய குளங்கள் வான் பாயவில்லை -பாதிப்படையும் சிறுபோகம்

குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டால், எதிர்வரும் சிறுபோகம் பாதிக்கப்படும் என விவசாயிகளால் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது பெரிய குளமாகிய இரணைமடுக் குளத்தின் முழுமையான நீர் மட்டம் 36 அடியாக காணப்படுகின்றபோது, தற்போது 27 அடி நீர் மட்டம் காணப்படுகின்றது. நெற்பயிர்ச் செய்கைக்கு நீர்ப்பாசனம் நடைபெறும் நிலையில், குளத்துக்கான நீர்வரவு அவசியமாகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான குளமான வவுனிக்குளத்தின் முழுமையான நீர் மட்டம் 26 அடியாகும். தற்போது 16 அடி நீர் மட்டமே காணப்படுகிறது.

வழமையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இக்காலங்களில் ஐந்து தடவைகளுக்கு மேல் குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், குளங்களுக்கு இவ்வாண்டு நீர் வரவு குறைவு காரணமாக, முக்கிய குளங்கள் வான் பாயாமல் உள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன்குளம், இதுவரை வான் பாயவில்லை. மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்று குளங்கள் வான் பாய்கின்ற போதுதான், எதிர்வரும் சிறுபோகத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.