கிளிநொச்சி விவசாயிகள் 415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி

கிளிநொச்சி விவசாயிகள் 415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி

கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்தளவு சேதன பசளையை கொள்வனவு செய்து, ஹெக்டேயர் ஒன்றுக்கு ரூபாய் 12,500 வீதம் 29,000 ஹெக்டேருக்கும் 415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் கமநல அபிவிருத்தி திணைக்களம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 19,000 விவசாயிகள் 29,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் காலபோக நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக, ஒரு ஹெக்டேயருக்கு ரூபாய் 20,000 பெறுமதியான சேதனப் பசளையைக் கொள்வனவு செய்ய முடியும். ஆயினும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஒரு ஹெக்டேயருக்கு ரூபாய் 7,500 பெறுமதியான சேதனப் பசளையையே கொள்வனவு செய்துள்ளனர்.

இதன்மூலம், 415 மில்லியன் ரூபாயை மீதப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளனர் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.