கிளிநொச்சி பூநகரியில் கசிப்பு காய்ச்சிய இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு
கிளிநொச்சி பூநகரியில் கசிப்பு காய்ச்சிய இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு
பூநகரி, முக்கொம்பனில் கசிப்பு காய்ச்சிய இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, கசிப்பு, உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
கசிப்பு காய்ச்சப்படுவதாக பொது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ஒன்று திரண்ட மக்கள் கசிப்பு காய்ச்சிய இருவரை மடக்கி பிடித்ததுடன் பூநகரி பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். பொலிஸார் வருவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சிய இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
முக்கொம்பனுக்கு வந்த பொலிஸாரிடம் கசிப்பு, உபகரணங்கள் எனபன பொது மக்களால் கையளிக்கப்பட்டன. 10 நாள்களுக்கு முன்னர், முக்கொம்பன் கிராமத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடாதிய நிலையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்களை தடுக்கும் செயற்பாடுகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.