கிளிநொச்சி பூநகரியில் கடலட்டைப் பண்ணைக்கான அனுமதிப்பத்திரங்கள்

கிளிநொச்சி பூநகரியில் கடலட்டைப் பண்ணைக்கான அனுமதிப்பத்திரங்கள்

பூநகரி, இலவங்குடா பகுதியில் அட்டை வளர்ப்பை மேற்கொள்ளும் வகையில் 83 பேருக்கான கடலட்டைப் பண்ணைக்கான அனுமதி பத்திரங்கள் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீனவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.