பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி

பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி

அனுராதபுரம், ஹொரோவ்பொத்தானை பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 10 வயது சிறுமி, ஆசிரியரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு அதே வயதுடைய ஒரு மகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் நடத்திய பயிற்சி வகுப்பில் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியும் கலந்து கொண்டதாகவும், அங்கு துஷ்பிரயோகம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் சிறுமி வீட்டிற்கு வந்து வகுப்பின் போது தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பெற்றோரிடம் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.