போலி நாணயத்தாளை பயன்படுத்தி எரிபொருளை பெற முயற்சித்த இருவர் கைது
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 1,000 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கறித்த இருவரும் கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 22 மற்றும் 29 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கிராண்ட்பாஸ் காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி 1,000 ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.