கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம் பெரும்போக அறுவடைக்கான எரிபொருள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம் பெரும்போக அறுவடைக்கான எரிபொருள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம், அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கருக்கு இடைப்பட்டநிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், 2022/2023 பெரும்போக அறுவடைக்கான எரிபொருள் இந்த வார இறுதியில் விநியோகிக்கப்படவுள்ளது என கிளிநொச்சி கமநல அபிவிருத்தி தினணக்களம் அறிவித்துள்ளது.

குறித்த எரிபொருள் கிடைக்கப்பெறவுள்ள விவரம் வருமாறு:

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 425 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 683 விவசாயிகளுக்கு கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும்.

இராமநாதபுரம் கமநலசேவை நிலையத்துக்கு உட்பட்ட 325.7 425 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 521 விவசாயிகளுக்கு யுனைட்டெட் எரிபொருள் மாட் (பிரை) லிமிட். ஊடாக விநியோகிக்கப்படும்.
புளியம்பொக்கனண கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 449.1 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 693 விவசாயிகளுக்கு கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும்.

முழங்காவில் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 411.1 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 640 விவசாயிகளுக்கு பூநகரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முழங்காவில் கிளை ஊடாக விநியோகிக்கப்படும்.

பூநகரி கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 663.2 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 971 விவசாயிகளுக்கு பூநகரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாடியடி கிளை ஊடாக விநியோகிக்கப்படும்.
அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 461.7 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 754 விவசாயிகளுக்கு அக்கராயன்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும்.

பளை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 380.7 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 663 விவசாயிகளுக்கு ஆழ்வார்பிள்ளை, எம். கனகரத்தினம் ஊடாக விநியோகிக்கப்படும்.
பரந்தன் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 350.7 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 471 விவசாயிகளுக்கு பரந்தன் திருமதி தம்பிப்பிள்ளை ஊடாக விநியோகிக்கப்படும்.

கண்டாவளை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 200.4 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 293 விவசாயிகளுக்கு பரந்தன் திருமதி தம்பிப்பிள்ளை ஊடாக விநியோகிக்கப்படும்.

உருத்திரபுரம் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 507.4 ஹெக்டேயர் நிலப்பரப்பின் 765 விவசாயிகளுக்கு கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும்.